நீர்கொழும்பு - குரண இடையில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறி மோதி விபத்து

நீர்கொழும்பு மற்றும் குரண புகையிரத நிலையங்களுக்கு இடையில், புகையிரதத்துடன் கொள்கலன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (15) மு.ப. 9.30 மணிக்கு நீர்கொழும்பில் இருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மந்த கதி புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து காரணமாக புகையிரதத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த புகையிரதம் இன்று இயங்காது என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...