மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள் இன்று பட்ஜட் பார்வையிட வருகை

- பாராளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் தடவை

பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500 இளைஞர், யுவதிகள்  ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுப்பதற்கு இன்று (14) பாராளுமன்றத்துக்கு வருகை தந்ததாக படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்ற வரலாற்றில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் போது இவ்வாறு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என படைக்கல சேவிதர் குறிப்பிட்டார்.

மேல்மாகாண பாடசாலைகள் சிலவற்றின் மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட மாணவ மாணவியர், தேசிய இளைஞர் பேரவையின் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 இளைஞர் யுவதிகள் இதில் அடங்குகின்றனர். அதற்கு மேலதிகமாக இளைஞர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் சிலரும் வரவு செலவுத் திட்ட உரையை பார்வையிட வருகை தந்திருந்தனர்.

வரவு செலவுத் திட்ட உரையைப் பார்வையிட்டதை அடுத்து அவர்கள் பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.  


Add new comment

Or log in with...