பேலியகொடை, வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை (13) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8.30 மணி முதல் 8 1/2 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சபுகஸ்கந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, சபை தெரிவித்துள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை மாநகரசபை பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை, கம்பஹா பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய நாளை (13) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை குறித்த பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படுமென சபை அறிவித்துள்ளது.
எனவே, போதியளவான நீரை சேகரித்து வைப்பதன் மூலம் அசெளகரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பாவனையாளர்களுக்கு சபை அறிவுறுத்தியுள்ளது.
Add new comment