கணனிக் கட்டமைப்பு வழமைக்கு; விமான நிலைய பணிகள் வழமைக்கு

கணனிக் கட்டமைப்பு செயலிழப்பு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தம்பிதமடைந்த குடிவரவு - குடியகல்வுத் திணைக்கள பணிகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) முற்பகல் திடீரென ஏற்பட்ட கணனிக் கட்டமை கோளாறு காரணமாக, விமான பயணிகளுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கணனி தன்னியக்க செயற்பாடுகள் மூலம் பணிகளை முன்னெடுக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து அதனை மாற்று வழி மூலம் முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...