பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஸ்லோவேனியா ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது.

எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது புதிதாக பதவியேற்றுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.


ஸ்லோவேனியா ஜனாதிபதியுடன் சந்திப்பு

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக்  நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோர் இற்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்லோவேனியா ஜனாதிபதி வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...