நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பயணிகள் பஸ் சேவை

விரைவில் கொழும்பு மாநகரில் ஆரம்பம்

பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், Gaman by Trace கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் இந்த பொதுப் போக்குவரத்துச் சேவை பற்றிய அறிமுகம் செய்யப்பட்டது.

கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை, நகர மண்டபம் உட்பட கொழும்பு நகரின் பெரும்பாலான பிரதான நிலையங்களை உள்ளடக்கியதாக இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்குள்ள சிறப்பு என்னவெனில் எவ்வளவு தூரம் பேருந்தில் பயணித்தாலும் 200 ரூபா மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக அறவிடப்படும். மொபைல் அப்ளிகேஷன் மூலம் கட்டணம் செலுத்தப்படும். எனவே, இந்த பஸ்களில் நடத்துனர் இல்லை என்பது மற்றொரு சிறப்பு.

 


There is 1 Comment

Add new comment

Or log in with...