தென்கொரியா, அமெரிக்கா வடகொரியாவுக்கு பதிலடி

ஜப்பான் வானுக்கு மேலால் வட கொரியா ஏவுகணை வீசியதற்கு பதிலடியாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா தீவிர ஏவுகணை ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் 4,600 கிலோமீற்றர் தூரம் பாய்ந்த வட கொரியாவின் இடைநிலை தூர ஏவுகணை பசுபிக் கடலில் விழுந்தது. இந்நிலையில் நேற்று (05) தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் தரையில் இருந்து தரையை தாக்கும் நான்கு ஏவுகணைகளை கடலுக்கு செலுத்தியதாக தென்கொரிய கூட்டுப் படை பிரதானி தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை தாக்குதல் இரு நட்பு நாடுகளுக்கு இடையிலான இராணுவ கூட்டு பயிற்சியில் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் இது நாட்டின் திறன்களை நிரூபிக்கும் முயற்சி மற்றும் வட கொரியாவின் ஆத்திரமூட்டல்களை தடுக்கும் என்று கூட்டுப் படை பிரதானி தெரிவித்துள்ளார்.

வட கொரியா இந்த ஆண்டில் பெரும் எண்ணிக்கையான ஆயுதச் சோதனைகளை நடத்தியிருப்பதோடு இதில், தடை செய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளும் அடங்கும்.


Add new comment

Or log in with...