சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அணிக்கும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி பழைய மாணவர் அணியான ஸஹ்ரியன்ஸ் 90 அணிக்குமிடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) சாய்ந்தமருது பொலிபோரியன் மைதானத்தில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸஹ்ரியன்ஸ் 90 அணி 10 ஓவர் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 48 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அணி 4.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 52 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்
Add new comment