நாட்டின் சில பகுதிகளில் இடையிடையே மழைக்கான சாத்தியம்

- வடக்கு, ஊவா, கிழக்கில் மாலையில் மழை

இன்றையதினம் (06) மேல், சப்ரகமுவ வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறவித்துள்ளது.

ஊவா, கிழக்கு வட மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Add new comment

Or log in with...