12ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் நேரடியாகவும் விஜயம்
முல்லைத்தீவு நகரில் கடற்றொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பிலும் அவர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கமைய விசேட குழுவொன்று இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்கிறது. அத்துடன் அடுத்து வரும் 12 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் நேரடியாக முல்லைத்தீவுக்கு கள விஜயமும் மேற்கொள்ளவுள்ளார். சுருக்குவலை பாவனை உள்ளிட்ட சட்டவிரோத மீன்பிடி மற்றும் வெளிமாவட்டத்தினரின் வருகை உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து ஒரு தரப்பினர் ஆரப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகி்றனர்.
சுருக்குவலை பாவனை அவசியமென மற்றுமொரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை அதிகாரிகள் மாற்ற வேண்டுமென்றும் அதிகாரிகளை மாற்றக்கூடாதென மற்றொரு தரப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏற்பட்ட குழப்பம் பொலிஸாரின் தலையீட்டினார் தடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொர்பாக அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு ஆராயும் வரை இருதரப்பும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் மீனவர்களிடம் கேட்டுக்ெகாண்டுள்ளார்.
இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்செய்யும் குழுவினர் நிலைமையை ஆராய்ந்து அமைச்சரிடம் அறிக்ைக சமர்ப்பித்ததன் பின்னர் எதிர்வரும் 12 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவுக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராயவுள்ளதுடன் மீனவர்களுடனும் பேச்சு நடத்தவுள்ளார்.
எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் தமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் போராடி வருகின்றனர்.
கடந்த 3 ஆம் திகதி காலை கடற்தொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காத போதிலும் பின்னர் அனுமதித்தனர். தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் கிடைக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.
Add new comment