பாதாள உலக முக்கிய புள்ளியான பெத்தியகொட சங்க முல்லேரியாவில் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக செயற்பாடுகளில்  ஈடுபட்டு வந்தவருமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “பெத்தியகொட சங்க” என்றழைக்கப்படும் லியனகே ஹர்ஷ சதுரங்க பெரேரா என்பவருடன் மற்றும் இருவர் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் முல்லேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து, ரி-54ரக துப்பாக்கி, 5துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பெத்தியகொட சங்கவை நவநகர பிரதேசத்தில் வைத்து கைது செய்து விசாரணைக்குட்படுத்தியபோது, அவரினால்​​ பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பரகடுவ பிரதேசத்தில் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இருவரும் துப்பாக்கியுடன் எஹலியகொட இரத்தினபுரி வீதியில் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது கல் புஸ்ஸெல்ல தோட்டத்துக்கு அண்மித்ததாக கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Add new comment

Or log in with...