இலங்கை அமைதிகாக்கும் படையினருக்கு சர்வதேச ரீதியில் கிடைத்துள்ள பாராட்டு

உயிராபத்தான சூழ்நிலையில் மாலியில் பணியில் ஈடுபட்டு வரும் ஐ.நா இலங்கை அமைதிகாக்கும் படையினரின் சிறந்த போர் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தினை பாராட்டும் முகமாக இடம்பெற்ற நிகழ்வில் 12 ஆவது இலங்கை பொறியியலாளர் படையணியின் மேஜர் ஆர்.ஏ.டி.எம்.டி செனவிரத்ன அவர்களுக்கு அண்மையில் சிறப்பு சேவை பதக்கம் வழங்கப்பட்டது.

மாலியில் காவோவில் இருந்து கிடால் வரையிலான சமீபத்திய வாகனத் தொடரணி பணியில் ஈடுபட்டு வந்த அமைதிகாக்கும் படையணியின் இலங்கை தேடல் மற்றும் கண்டறிதல் குழுவினர், இரண்டு மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி சாதனங்களை கண்டுபிடித்ததுடன் அவை வெடித்து சேதம் ஏற்படுத்துவதற்கு முன்பு இரண்டையும் திறம்பட செயலிழக்கச் செய்தனர்.

அமைதிகாக்கும் படை முகாமிற்கு வருகை தந்த மினுஸ்மா படைத் தளபதியான லெப்டினன்ற் ஜெனரல் கொர்னேலிஸ் ஜொஹானஸ் மத்திஜ்சென், இலங்கை இராணுவத்தின் 4 ஆவது அமைதிகாக்கும் படைக் குழுவின் தொழில்முறைத் திறனைப் பெரிதும் பாராட்டியதுடன், வீதியோரம் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த இரண்டு மேம்படுத்தப்பட்ட கண்ணிவெடி சாதனங்களை கண்டுபிடித்த 12ஆவது இலங்கை பொறியாளர் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான மேஜர் ஆர்.ஏ.டி.எம்.டி. செனவிரத்ன அவர்களின் சேவையை பாராட்டி அவருக்கு பதக்கத்தை வழங்கினார்.

எம்.எஸ்எம்.நஜாத்


Add new comment

Or log in with...