Saturday, October 1, 2022 - 2:14pm
இலங்கை பெட்மிண்டன் சம்மேளனத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திறந்த வெளி பெட்மிண்டன் விளையாட்டு, நுவரெலியா விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நுவரெலியா பெட்மிண்டன் சங்கத்தினரால் நுவரெலியா விளையாட்டுக் கழகத்தில் 100 வருட பூர்த்தியை ஒட்டியே இந்த போட்டி நடைபெற்றது.
இவ்வைபவத்தில் மத்திய மாகாண பெட்மிண்டன் சங்கத்தின் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வருமான மஹிந்த தொடம்பேகமகே, நுவரெலியா விளையாட்டுக் கழக தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி, முன்னாள் நுவரெலியா மாநகர பிரதி முதல்வர் கே. சந்திரசேகரன் உட்பட கழகங்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
Add new comment