இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement, 500,000 க்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நல்விளைவை ஏற்படுத்திய பல சமூக அபிவிருத்தி திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் முன்னெப்போதுமில்லாத வகையிலான வருடத்தின் முதல் பாதியை நிறைவு செய்துள்ளது. Puttalam Cement Works (PCW) மற்றும் Ruhunu Cement Works (RCW) ஆகியவற்றை அண்டியதாக இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
INSEE Cement தான் இயங்கும் சமூகங்களில் வலுவான ஒருங்கிணைப்பை ஊட்டுவதன் மூலம் வேலைவாய்ப்பு, வலுவூட்டுவதல், சமூக மேம்பாடு மற்றும் பல்வேறு சமூகத் திட்டங்கள் மூலம் நிறுவனத்துடன் இணைந்து சமூகங்களும் முன்னேற்றம் காண்பதை உறுதி செய்துள்ளது.
சமூக மேம்பாடு என்பது சமூகம் மற்றும் பங்குதாரர்களின் ஈடுபாட்டின் கீழ் INSEE இன் முக்கிய அங்கங்களில் ஒன்றாக உள்ளது. கல்வி, சுகாதாரம், சுத்தமான நீர் வழங்கல் மற்றும் சுத்தம் ஆகியவற்றுக்கான அணுகல் என இது மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான அணுகலைப் பொறுத்தவரை, INSEE Cement நான்கு முன்பள்ளிகளுக்கு ஆதரவளித்தது. இதில் இரண்டு Puttalam Cement Works ஐ அண்டிய பிரதேசத்திலும், ஒன்று Ruhunu Cement Works ஐ அண்டிய பிரதேசத்திலும் மற்றும் எழுவன்குளத்தில் மற்றொன்றுமாக உதவி வழங்கப்பட்டுள்ளது. நிதி ரீதியாகவும் பொருள் ரீதியாகவும், குழந்தைப் பருவத்தில் வலுவான அறிவாற்றல், உள மற்றும் உடல் ரீதியான அத்திவாரத்தை உறுதி செய்வதற்காக இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மிகவும் சகல துறை ஆற்றல்மிக்க எதிர்கால சந்ததியை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். புத்தளம், அட்டவில்லுவவில் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு நிறுவனம் ISURU Reading Club உடன் இணைந்து பல வகைப்பட்ட புத்தகங்களை வழங்குவதுடன், நூலகத்தையும் அதன் வளங்களையும் பராமரித்து அதன் பலன்களை சமூக உறுப்பினர்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு அனுபவிப்பதற்கு வழிவகுத்துள்ளது.
Add new comment