கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஹொக்கி விளையாட்டுப் போட்டி மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகளில் அம்பாறை டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி முதலிடம் பெற்று தேசிய ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (26) காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் நடைபெற்ற ஹொக்கி இறுதிப்போட்டியில் டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி அணி மூன்று கோல்களை புகுத்தி முதலாமிடத்தை பெற்றுக் கொண்டது.
இதில் இரண்டாம் இடத்தை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி அணியும், மூன்றாமிடத்தை காரைதீவு சண்முகா மகாவித்தியாலய அணியும் பெற்றன.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்
Add new comment