காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் வெற்றி

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டு கழகங்களுக்கிடையிலான கடினப் பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகம் 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகத்திற்கும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திற்குமிடையிலான போட்டி காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலெடுத்தாடிய காரைதீவு விவேகானந்தா 39.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...