நான்காம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடிய Colombo City Centre

Colombo City Centre அதன் நான்காவது ஆண்டுவிழாவை கடந்த 19 ஆம் திகதி சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது. ஆண்டுவிழாவுக்கு முந்திய வார இறுதியில், ஏராளமான மக்கள் CCC இற்கு வருகை தந்ததோடு, அவர்கள் தங்களது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். இங்குள்ள விற்பனை நிலையங்களில் பிரத்தியேக ஆண்டுவிழா சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

நான்கு வருட வெற்றிகரமான பயணத்தை நினைவுகூரும் வகையில் 4 ஆவது ஆண்டுவிழாவை CCC சிறப்பாகக் கொண்டாடியது. CCC நிர்வாகம் மற்றும் இங்குள்ள விற்பனை நிலைய உரிமையாளர்கள் உத்தியோகபூர்வமாக கேக் வெட்டும் நிகழ்வில் பங்குபற்றியதோடு, வணிக நிலையங்களை நடத்தும் சமூகத்தினருக்கு கடந்த 4 ஆண்டுகள் அவர்கள் வழங்கிய பங்களிப்புக்காக சிறப்பு பாராட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டுவிழாவுடன் இணைந்ததாக கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் ஆண்டுவிழா கருப்பொருளின் கீழ் ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சீட்டிழுக்கப்பட்டு 4 அதிர்ஷ்டசாலிகளுக்கு மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

செப்டம்பர் 18ஆம் திகதியன்று En Route வழங்கிய Jazz இசையை ரசித்தவாறே Playtrix ​​இல் ஆடம்பர உணவை சுவைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இதில் கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேலையில் Playtrix இலவசமாக இனிப்பு வழங்கியது. ஆண்டுவிழா நிமித்தம் அநேகமான கடைகள் சிறப்பு தள்ளுபடிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கின.

ஆண்டுவிழா வார இறுதியில் CCC இற்கு வருகை தந்த குழந்தைகளுக்காக பல சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

Colombo City Centre கடந்த நான்கு வருடங்களில் பல மைல்கற்களை கடந்துள்ளதோடு, இலங்கையர்கள் தமது குடும்பத்துடன் வருகை தந்து ஒன்றாக ஓரிடத்தில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கக்கூடிய ஒரு இடத்தை உருவாக்குதே முதன்மை நோக்கமாகும்.

Colombo City Centre ஆண்டு விழா தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதம செயற்பாட்டு அதிகாரி ஹிருஷ்க பெர்னாண்டோ, இக்கருத்தை தெரிவித்தார்.


Add new comment

Or log in with...