உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக உயர்ந்தது இந்திய தேசம்!

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய சிந்தனையில் உதித்த திட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி!

பிரித்தானியாவை முந்தியபடி அபார வளர்ச்சி!

இந்தியப் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியானது பிரதமர் நரேந்திர மோடியின் திறமைமிகு சாதனைகளில் ஒன்றாகுமென்று இந்திய பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனை முந்தியவாறு உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது என்ற செய்தி சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'கிரேட் பிரிட்டன்' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பொருளாதாரம் தற்போது சுருங்கியுள்ளது. அக்காலத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் வலுவாக இருந்தது. இந்த நாடு உலகில் இதுவரை முதல் ஐந்து நாடுகளின் பொருளாதாரப் பட்டியலில் தனது இடத்தை உறுதியாகப் பிடித்திருந்தது.ஆனால் இப்போது இந்தியா பிரிட்டனை முந்திக் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியென்றே அதனைப் பதிவு செய்ய முடியுனெ்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தொடர்பான புத்தகமொன்று புதுடில்லியில் அண்மையில் வெளியிட்டு வைக்கப்பட்டது இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேசுகையில் "இந்த புத்தகத்தில் 10 அத்தியாயங்களில் பிரதமர் மோடியின் 86 உரைகள் உள்ளன. சிக்கலான சமூகப் பிரச்சினைகள் பற்றிய ஆழமான புரிதலையும், அவரது தெளிவான பார்வையையும் விளக்குகிறது. எதிர்கால வரலாற்றாசிரியர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிக்கலான தேசியப் பிரச்சினைகளில் பிரதமர் மோடியின் எண்ணங்களையும், தலைமைத்துவத்தையும் இந்த உரைகளின் மூலம் ஒருவர் புரிந்து கொள்ள முடியும். இதன் விளைவாக இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

நரேந்திர மோடியின் புகழுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவின் கடைசிக் குடிமகனுக்கு சேவை செய்வதிலும் அவர் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றார். அவரது ஆர்வத்துடனான இந்தச் செயல்கள்தான் மக்களுக்கு அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன. அனைத்துத் தரப்பு மக்களையும் இணைக்கும் திறனை பிரதமர் மோடி கொண்டுள்ளார்.

பல்வேறு சர்வதேச ஆய்வுகள் பிரதமர் மோடியை உலகில் மிகவும் பிடித்தமான பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளன. உலகநாடுகளின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பிரதமர் நநரேந்திர மோடியின் சாதனைகளை விரிவாக ஆராய்ந்துள்ளனர்.

வெளிநாட்டு உறவுகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் அவர் கொண்டுள்ள ஆர்வமானது இந்திய மக்களை நன்கு கவர்ந்துள்ளது. இந்தியாவின் சுற்றுச்சூழல் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் யோசனைகள், பசுமை இந்தியாவை மேம்படுத்தும் திட்டங்கள் போன்றன மக்களை நன்கு கவர்ந்துள்ளன.

இதேவேளை பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளால் எட்டு ஆண்டு காலப்பகுதியில் இந்திய பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வுகள் கூறுகின்றன.

பிரிட்டனை மிஞ்சும் வகையில் உலகின் 5- ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளமை ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பெருமை அளிப்பதாகும். இந்த வெற்றியானது ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பிரிட்டன் போராடும் இன்றைய நேரத்தில், இந்தியாவினால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தாக்கப்பட்டு, காயப்பட்டு, இரத்தம் சிந்திய ஒரு நாடு இந்தியா ஆகும். இந்நிலையில் இழந்த பொருளாதாரச் செழிப்பு மற்றும் செல்வாக்கை எவ்வாறு சீராக மீட்டெடுக்க இந்தியாவினால் முடிந்தது என்பதுதான் வியப்பு! அந்த வெற்றியானது பிரதமர் நரேந்திர மோடியின் திறமையின் விளைவு என்பதுதான் பொதுவான கருத்து ஆகும்.

வீழ்ச்சியுற்ற பொருளாதாரத்தை கடந்த எட்டு ஆண்டுகளில் முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. தேசியப் பொருளாதாரத்தை உயர்நிலைக்கு கொண்டு வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பெரிய கொள்கை மாற்றங்களைச் செய்ததை இங்கு நினைவுபடுத்துவது அவசியமாகும்.

பிரதமர் மோடி கடந்த காலத்தை புறந்தள்ளி, இந்தியர்களின் பல ஏமாற்றங்களை ஈடு செய்து, அவர்களின் திறனை வெளிக்கொணர்ந்து, இந்தியாவென்ற மாபெரும் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் ஒரு எதிர்காலத்தைத் தொடங்கினார்.

பிரதமர் மோடி கொண்டு வந்த நிலையான மாற்றங்களின் தாக்கத்தை இந்த எட்டு ஆண்டுகள் கண்டன. 2022_-23 நிதியாண்டின் முதல் காலாண்டில் 13.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இப்போது உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூருகின்றனர்.

தொழில் துறைக்கான ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஊக்குவித்தார். ரூபா 2 இலட்சம் கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் பலன்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்குள்ள ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்களைப் பெறும் உலகின் மிகப்பெரிய இலவச உணவுத் திட்டம், உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசித் திட்டம் ஆகியவை இந்தியாவின் பொருளாதாரம் தொற்றுநோயின் அழிவுகளிலிருந்து வேகமாக மீண்டு வருவதற்கு பெரிதும் உதவின.

இதேவேளை இன்றைய இந்தியா இணைய பயனாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோன்று நுகர்வோர் சந்தையிலும் வலுவான இடம்பிடித்துள்ளது. இந்தியா இப்போது உலகளாவிய வர்த்தகத்தில் வலுவான பங்கேற்பாளராக இருக்கின்றது.

இந்தியா முந்திய ஏற்றுமதி சாதனைகளை முறியடித்து, இந்த ஆண்டு ரூபா 50 இலட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி ரூபா 31 இலட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. ஒரு காலத்தில் பிறரின் கருணையில் வாழ்ந்த நாடு, இன்று உலகிற்கே உணவை ஏற்றுமதி செய்யும் நாடாகத் திகழ்கிறது.

மோடி அரசின் வெற்றிக்கதைகளின் பட்டியல் நீளமானது. ஒவ்வொரு மாதமும் ​ெடாலர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு புதிய நிறுவனங்கள் சேர்க்கப்படுகின்றன. பிரதமர் மோடியின் அயராத தலைமையின் கீழ், இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சில நூறு என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 70,000-ஆக வளர்ந்துள்ளன. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 50 சதவீதம் இரண்டாம், மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளன. இந்த வெற்றி பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் இந்தியா புரட்சியால் விளைந்ததாகும்.

2014- இல் இந்தியாவில் 6.5 கோடி பு​ேராட்பேண்ட் சந்தாதாரர்கள் இருந்தனர்; இன்று 78 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.

வளரும் இந்தியா என்பது கண்ணாடி மால்களில் மட்டும் அல்ல என்பதை நன்கு உணர்ந்த பிரதமர் மோடி, வறுமையைக் குறைப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

அதன் பலனாக நுகர்வு சமத்துவமின்மை எவ்வாறு வெகுவாக குறைந்துள்ளது என்பதை சமீபத்திய ஐ.எம்.எப் ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. இவைதவிர, ஏழைகளுக்கான வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் ஆகிய சமூக மேம்பாட்டுக் குறியீடுகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

பின்தங்கியவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது முதல் ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் குழாயில் குடிநீரை கொண்டு சேர்ப்பது வரை பல திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் 'ஒரே பாரதம் - உன்னத பாரதம்' திட்டம் சீராக வடிவம் பெற்றுள்ளது. இது அரசையும் மக்களையும் உள்ளடக்கிய ஒருபார்வை - கூட்டு முயற்சி. இந்தியா தற்சார்பு சவால்களை சந்திக்கவும், துன்பங்களை சமாளிக்கவும் தன்னம்பிக்கையுடன் தயாராக உள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற இரட்டை மைல்கற்களை கடப்பது இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் ஒரு மகத்தான சாதனை என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் கட்டத்தில் இருந்து 5 டிரில்லியன் ​ெடாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைவதற்கான பாதையில் இந்தியா தனது பயணத்தைத் தொடங்குகிறது.

எஸ். சாரங்கன்...


Add new comment

Or log in with...