மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நவராத்திரி பூஜை

- விசேட அதிதியாக சுப்ரமணியன் சுவாமி பங்கேற்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்று (28) புதன்கிழமை இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபா முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி விசேட அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

நவராத்திரி என்பது வீரம், செல்வம், கல்வி ஆகியவற்றைக் குறிக்கும் தெய்வங்களான துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை நினைவுகூர்ந்து, ஒன்பது இரவுகள் நடத்தப்படுகின்ற ஓர் இந்து பண்டிகையாகும்.


Add new comment

Or log in with...