இலங்கைக்கு மேலதிகமான உதவிகளை வழங்க தயார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவிப்பு

இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம்  நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால பங்காளியாக இலங்கை திகழ்வதாக குறிப்பிட்ட அவர், அதற்கமைய, தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு மேலதிக நிதியுதவிகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...