ஒரு சில நிறுவனங்களில் புடவை அணிய வற்புறுத்தல்; கண்ணியமான ஆடை அணிதல் போதுமானது

- பொது நிர்வாக செயாலாளர் சுற்றறிக்கை மூலம் விளக்கம்

அரச ஊழியர்கள் தங்களது கடமை நேரத்தில்   கண்ணியமான ஆடை அணிதல் போதுமானது என, - பொது நிர்வாக அமைச்சின் செயாலாளர் எம். எம்.பி. கே. மாயாதுன்னே சுற்றறிக்கை மூலம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்களது கடமை நேரத்தில், அரச சேவையின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையிலான உடையொன்றை அணிந்திருத்தல் வேண்டுமென, ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரத்தின் ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஒரு சில நிறுவன தலைவர்கள் பெண் ஊழியர்களை புடவை அல்லது ஒசரி மாத்திரம் அணிய வற்புறுத்தும் சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம்

மேற்படி விடயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள 2019.06.26 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2019(I) இன் பால் தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.

2. மேற்படிச் சுற்றறிக்கையின் 03 ஆம் பந்தியின் / இன் கீழ், "அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரத்தினுள் தமது அலுவலக வளாகத்திற்கு வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டையும் மேற்சட்டையும் அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒசரி அல்லது அரச சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான, கண்ணியமான உடையொன்றை அணிந்திருத்தல் வேண்டும்." என்றவாறு அமைச்சரவை அங்கீகாரத்தின் ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

3. அவ்வாறு சுற்றறிக்கை ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தியிருக்கும், பெண் உத்தியோகத்தர்களுக்கு தமது அலுவலக வளாகத்திற்கு வரும் போது உடையாக சாரி அல்லது ஒசரி மட்டும் அணியுமாறு ஒரு சில நிறுவனத் தலைவர்களினால் பணிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்கள் அறிக்கையிடப்பட்டுள்ளது.

4. அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலக வளாகத்திற்கு வருகை தரும் போது மற்றும் கடமையில் ஈடுபடும் போதும் சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் பொருத்தமான அலுவலக உடையொன்றை அணிந்திருக்க வாய்ப்பளிக்கப்படல் வேண்டும். மேலும், இது கள உத்தியோகத்தர்களுக்கும் ஏற்புடையதாகும்.

5. அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச விழாக்கள் அல்லது மாநாடுகள் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் தேசிய உடை அல்லது குறித்துரைக்கப்பட்டுள்ள உடையினை அணிந்து பங்கேற்றல் வேண்டும்.

6. 2019.06.26 ஆந்திகதிய அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 13/2019 (I) இன் ஏற்பாடுகள் மாற்றமின்றி தொடர்ந்திருக்கும்.

PDF File: 

Add new comment

Or log in with...