புகையிரத தரிப்பிடத்தை கடந்து கட்டடமொன்றில் மோதிய புகையிரதம்

தெமட்டகொடை புகையிரத தரிப்பிடத்தின் ஊடாக பயணித்த புகையிரம் ஒன்று குறித்த தரிப்பிட கட்டத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (27) முற்பகல் பெலியத்தவிலிருந்து புறப்பட்ட ருஹுணு குமாரி கடுகதி புகையிரதம் தனது பயணத்தை நிறைவு செய்து விட்டு, புகையிரத தரிப்பிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது அத்தரிப்பிடத்தின் முடிவை கடந்து முன்னாலுள்ள புகையிரத சாரதிகளின் தங்குமிட கட்டடத்தில் மோதி இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் குறித்த கட்டடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து குறித்து புகையிரத திணைக்களத்தின் ஊடாக உள்ளக விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


Add new comment

Or log in with...