அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி

- பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியினால் நடவடிக்கை

கொழும்பு மாவட்டத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1955ஆம் ஆண்டின் 32ஆம் இலக்க கொண்ட அரச இரகசிய சட்டக் கோவையின் 2ஆவது பிரிவின் கீழ், பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் (கொழும்பு மாவட்டம்)

  • பாராளுமன்றம்
  • உயர், மேல், நீதவான் நீதிமன்றங்கள்
  • சட்ட மா அதிபர் திணைக்களம்
  • ஜனாதிபதி செயலகம்
  • ஜனாதிபதி மாளிகை
  • கடற்படை தலைமையகம்
  • பொலிஸ் தலைமையகம்
  • பாதுகாப்பு அமைச்சு
  • அக்குரேகொட இராணுவத் தலைமையகம்
  • விமானப்படை தலைமையகம்
  • பிரதமர் அலுவலகம்
  • அலரி மாளிகை
  • பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள்

PDF icon 2298-53_T.pdf (178.07 KB)

PDF File: 

Add new comment

Or log in with...