கிரிக்கெட் வீரர் மஹீஷ் தீக்‌ஷண சார்ஜெண்ட் தரத்திற்கு தரமுயர்வு

- ஆசிய கிரிக்கெட், வலைப்பந்து இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகள் தரமுயர்வு, நிதியுதவி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறந்த பங்களிப்பை வழங்கிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹீஷ் தீக்‌ஷண உள்ளிட்ட இராணுவத்தில் அங்கம் வகிக்கும் விளையாட்டு வீர வீராங்கனைகள் அடுத்த தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச அரங்கில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய விளையாட்டு வீர வீராங்கனைகளை மதிப்பீடு செய்து அவர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்கு பதவியுயர்வு மற்றும் நிதியுதவிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (20) இராணுவத் தலைமையகத்தில் உள்ள இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள், இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

இந்த சிநேகபூர்வ சந்திப்பில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே,  நாட்டுக்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களை பாராட்டினார்.

இராணுவ விளையாட்டுப் பணிப்பாளரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் 2022 ஆசிய கிண்ண சம்பியன்ஷிப் தொடரை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் இராணுவ துடுப்பாட்ட வீரர் சார்ஜெண்ட் எம். மஹீஷ் தீக்ஷண, 2022 ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் இலங்கை தேசிய வலைப்பந்து அணி கோப்ரல் ரி.ரி. அல்கம, கோப்ரல் கே.பி.வை. டி சில்வா, கோப்ரல் எம்.ஏ.ஐ.ஜே. பெரேரா, 2022 ஆசிய உடற்கட்டமைப்பு சம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற உடற்கட்டழகர் கோப்ரல் ஆர்.ஏ.டி.பி. ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன்போது, ​​விளையாட்டு வீரர்களின் சாதனைகளை மதிப்பீடு செய்து அவர்களின் விளையாட்டுத் திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் அவர்களை அடுத்த தரத்திற்கு உயர்த்துமாறு இராணுவத் தளபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அதன்படி, சாதாரண சிப்பாயான இருந்த மஹீஷ் தீக்ஷண சார்ஜெண்ட் தரத்திற்கும், சாதாரண சிப்பாயான ரி.ரி. அல்கம கோப்ரல் தரத்திற்கும், சாதாரண சிப்பாய் K.B.Y.D. சில்வா கோப்ரல் தரத்திற்கும், சாதாரண சிப்பாய் எம்.ஏ.ஐ.ஜே. பெரேரா கோப்ரல் தரத்திற்கும் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த விளையாட்டு வீரர்களின் சர்வதேச சாதனைகளை மேலும் மதிப்பிடும் வகையில், கட்டளைத் தளபதி சார்ஜென்ட் மஹீஷ் தீக்ஷண, வலைப்பந்தாட்ட அணியின் உறுப்பினர்கள் மற்றும் உடற்கட்டழகர் லான்ஸ் கோப்ரல் ஆர்.ஏ.டி.பி. ராஜபக்சவுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதுடன், இராணுவத் தளபதி அவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்காக வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ்.எஸ். வனசிங்க USP NDU, பணிப்பாளர் நாயகம் நிதி முகாமைத்துவ மேஜர் ஜெனரல் W.B.S.M. அபேசேகர RSP USP மற்றும் இராணுவ விளையாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் K.A.W.N.H. பண்டாரநாயக்க USP உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...