2 மணித். 20 நிமிட மின்வெட்டு கோரிக்கை நிராகரிப்பு

நாளை (22) முதல் நீண்ட மின்வெட்டுக்கு விடுக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்க மறுத்துள்ளது.

மின்வெட்டை நீடிப்பதற்கான சரியான காரணத்தை மின்சார சபை தெரிவிக்காததால் குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சார சபையினால் நாளை (22) முதல் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தாம் அதனை நிராகரித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தற்போது நடைமுறையில் உள்ள 1 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டையே அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய இன்றையதினம் (21) போன்று நாளையதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை செப்டெம்பர் 22.pdf>>
<<
பிரதேசங்கள்-ABCDEFGHIJKL.pdf>> 

<<பிரதேசங்கள்-PQRSTUVW.pdf>>
(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

 

PDF File: 

Add new comment

Or log in with...