எதிர்வரும் திங்கட்கிழமை (19) விசேட அரசாங்க விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையிட்டு மகாராணியின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் செப்டெம்பர் 19ஆம் திகதி தேசிய துக்கதினமாக, பொது நிர்வாக அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த தினத்தில் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறையையும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தினத்தில் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Add new comment