தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு

- தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகிறது இ.தோ.கா.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு நடத்திய மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை பெருந்தோட்டங்களில் பணியாற்றும் பெரும்பாலான  தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமான ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதில்லை என்றும்  அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றும் புகார் எழுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நேற்றைய தினம் (10) பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தின் போது, அவர்களுக்குப் பெரும் முறைகேடு நடத்தப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு உரித்தான தோட்டங்களுகளில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்   தீர்மானித்துள்ளது.


Add new comment

Or log in with...