மின்சார பயன்பாட்டு வாகனங்களை மாத்திரம் அரசாங்கம் கொள்வனவு செய்யும்

- அதனை பின்பற்ற தனியார் துறையும் ஊக்குவிக்கப்படும்

எதிர்காலத்தில் அரச நிறுவனங்களின் தேவைக்காக மின்சார பயன்பாட்டைக் கொண்ட வாகனங்கள் மாத்திரம் கொள்வனவு செய்யப்படுமென, இடைக்கால வரவு செலவுத் திட்ட முன்மொழிவில், நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் (30) பாராளுமன்றில் தெரிவித்தார்.

தனியார் துறையினரும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கை என்ற வகையில், எரிபொருளை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களை கொள்வனவு செய்வதை நிறுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது வாகனத்தின் வினைத்திறன் மற்றும் விலைகளை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான வாகன வகைகளைத் தீர்மானிக்கபடும்.

இந்த முன்மொழிவுகள் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படுவதுடன் 2026 ஜனவரி 01 இல் முழுமைப்படுத்தப்படுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...