சக்தி கார்ஸ் உரிமையாளர் சக்திவேல் தஞ்சை அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு என்னும் கிராமத்தில் பிறந்தவர். சக்திவேல் என்னும் இயற்பெயராலும், இலக்கிய உலகில் கவிமுகில் என்னும் பெயராலும் அறியப்படுகிறார். 16-.06.-1968அன்று பாவாடை ஆர்ச்சுத்தியார்_- ஷரூபாவதி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். 50பைசா வருமானத்தில் தொடங்கி, இன்று 25000சதுர அடி பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை அங்காடிக்கு உரிமையாளர்.
தனக்குள் இருக்கும் தமிழ் ஆர்வத்தினால் கவிமுகில் என்னும் புனைபெயரில் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அறக்கட்டளைகளைத் தொடங்கி விருதுகளும், சமுதாய உதவியும் செய்து வருகிறார்.
இவரின் 50ஆவது அகவையை முன்னிட்டு அண்மையில் 'அருந்தமிழ்க் கவிஞர் 50' எனும் விழா நிகழ்த்தப்பட்டது. அந்த விழாவில் ஏழு நூல்களும், அவரைப் பற்றிய ஆவணப்படமும் வெளியிடப்பட்டன. சிறந்த ஆளுமைகளுக்கு, படைப்புகளுக்கு விருதுகள் வழங்கல், நூல்களுக்குப் பரிசுகள், மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது என மகிழ்ச்சிக் கொண்டாட்டமாக நடந்தது. அதில் இயக்குநர் மாமன்னன் செல்வராஜ் இயக்கிய 'வெற்றி நாயகன் கவிமுகில் 50' என்ற ஆவணப்படத்தைத் திரைக்கதைப் பிதாமகன் கே. பாக்யராஜ் வெளியிட்டு ஆவணப்படத்தைப் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
மேலும் சு. சங்கரவடிவேலு ஐ.ஆர்.எஸ் முன்னிலை வகிக்க, சாகித்திய அகாதெமி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முனைவர் இராம. குருநாதன் வரவேற்புரை வழங்கினார். மகாகவி ஈரோடு தமிழன்பன் தலைமையுரை வழங்கினார். கவிஞர்கள் இளைய கம்பன் மற்றும் ச. சு. கலையரசன் சக்திவேல் இருவரும் கவிபாடினர். கவிஞர் தங்கம் மூர்த்தி, ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குநர் திருமதி வனிதா ஐ.பி.எஸ், சிறுபான்மை நலத்துறை இயக்குநர் ெடாக்டர் சி. சுரேஷ்குமார் ஐ.ஏ.எஸ், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் நா. அருள் ஐ.ஏ.எஸ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். பேரா. இரா. மஞ்சுளா, கவிஞர் சி. புனித ஜோதி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, 'விழிகள்' நடராஜன் நன்றியுரை வழங்கினார்.
1.படைப்புப் பாதையில் ஒரு பயணம் 2. கவிமுகிலின் கவிதை வானம் (அணிந்துரைகள்) 3. பேரா. ஆதிரா முல்லை எழுதிய காலச்சிற்பி 4. ஏ. எஸ் இளங்கோவன் எழுதிய கவிமுகிலின் மவுனம் கலைத்த வினாக்கள் (ஆங்கில மொழிபெயர்ப்பு) 5. பேரா. ஆர். விஜயலட்சுமி எழுதிய கவிமுகிலின் சூரியத் துளிகள், சின்ன உளிகள், மௌனம் கலைத்த வினாக்கள் (இந்தி மொழிபெயர்ப்பு) 6. பேரா சி சங்கரநாராயணன் எழுதிய மௌனம் கலைத்த வினாக்கள் (ஆங்கில மொழிபெயர்ப்பு) 7. வேடியப்பன் எழுதிய கல்பொரு சிறுநுரை - கவிமுகிலின் தேர்ந்தெடுத்த கவிதைகள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
முனைவர் வ. ஜெயதேவனுக்கு வாழ்நாள் சாதனைக்காக மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் உத்தமசோழன், முகிலை ராஜபாண்டியன், கவிஞர் இளைய கம்பன், கவிஞர் ஆஷரூர் தமிழ்நாடன் போன்றோரின் நூல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இலக்கிய உலகில் சாதனை படைத்த எண்ணற்றோருக்கும், தொழில்துறையில் சிறந்து விளங்கும் தொழில்முனைவோருக்கும் விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எச்.எச்.விக்ரமசிங்க
Add new comment