திருகோணமலை, மூதூர், பச்சனூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ஆம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சிரமதான பணிக்காக சென்றவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (20) முற்பகல் சேருவில பிரதேசத்திலிருந்து சுமார் 20 பேர் உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் கொக்கை கழன்று அதன் பெட்டி பள்ளத்தில் வீழ்ந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அதில் பயணித்தோர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு காயங்களுக்குள்ளானவர்கள் மேலும் சிலர் மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
Add new comment