ஜெய்லானி தேசிய பாடசாலை தேசிய மட்ட போட்டிக்கு தகுதி

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி–கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளின் 16 வயதுக்கு உட்பட்ட உதைபந்தாட்ட சுற்றுபோட்டியில் பலாங்கொடை ஜெய்லானி தேசிய பாடசாலை சம்பியன் பட்டம் வென்று தேசிய மட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓப்பனாயக்க வித்தியாகர மகா வித்தியாலயத்துடனான இறுதிப் போட்டியில் ஜெய்லானி தேசிய பாடசாலை பெனால்டி முறையில் 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த சுற்றுப்போட்டிக்கு இரு மாவட்டங்களிலும் இருந்து 24 அணிகள் தகுதி பெற்றிருந்த போதிலும் 17 பாடசாலை அணிகள் மட்டுமே பங்கு பற்றின. போட்டிகள் இரத்தினபுரி சீவலி மற்றும் முத்துவ மைதானங்களில் நடைபெற்றன.

பலாங்கொடை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...