வாயினுள் மாத்திரைகளை மறைக்க முயன்ற பெண் சிறைக்காவலர் கைது

வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் சிறைக்காவலர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சோதனையிடப்படும் இடத்தில் நேற்று (17) இக்கைது இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் 52 வயதுடைய சந்தேகநபரான குறித்த சிறைக்காவலரை சோதனையிட்ட போது, தன்னிடம் இருந்த போதைப்பொருளுக்கு நிகரான மாத்திரைகளை திடீரென வாயிலிட்டு மறைக்க முயற்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் சிறைக்காவலர் மேலதிக விசாரணைகளுக்காக இரண்டாம் நிலை சிறைச்சாலை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறித்த மாத்திரைகள் போதை மாத்திரைகளா என்பதைக் கண்டறிய சிறைச்சாலை வைத்தியசாலை ஊழியர்களிடம் அவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...