23ஆம் திகதி சமுகமளிக்க ஆணையாளர் அறிவிப்பு
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் கருத்துக்களை கேட்டறிவதற்கும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அரசியல் கட்சிகளின் யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் எதிர்காலத்தில் குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்குமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத சுமார் 50 அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment