ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதான தானிஸ் அலிக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (15) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து, அதன் ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தானிஸ் அலி எனும் குறித்த நபர், கடந்த ஜூலை 26ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற போது விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தானிஸ் அலி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களுக்கு ஓகஸ்ட் 26ஆம் திகதி விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment