உலகக் கிண்ண கால்பந்து: ஒருநாள் முன்னதாக ஆரம்பம்

கட்டாரில் நடைபெறவுள்ள பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி திட்டமிட்டதை விடவும் ஒருநாள் முன்னதாக நவம்பர் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் கட்டார் மற்றும் ஈக்வடோர் அணிகள் மோதவுள்ளன.

போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சியையும் போட்டியை ஏற்று நடத்தும் நாட்டின் முதல் ஆட்டத்தையும் ஒரே நாளில் நடத்த உலக கால்பந்து சம்மேளனம் ஒருமனதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து திகதி மாற்றப்பட்டுள்ளது.

போட்டியின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக ஆரம்ப நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதில் போட்டியை ஏற்று நடத்தும் நாடு பங்குபெறும்.

இதற்கு முன்னர் நவம்பர் 21ஆம் திகதியன்று ஆரம்ப நிகழ்ச்சிக்குப் பின்னர் கட்டாரும் ஈக்குவடோரும் மோதவிருந்தன.

ஆனால் அதற்கு முன்னர் வேறு இரு ஆட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்தன.

ஆரம்ப நிகழ்ச்சி மற்றும் முதல் போட்டி 60,000 ஆசனங்கள் கொண்ட அல் பைத் அரங்கில் நடைபெறும்.

திகதி மாற்றத்தால் உலகக் கிண்ணப் போட்டி 29 நாட்கள் நீடித்து டிசம்பர் 18ஆம் திகதி நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...