மடுல்சீமை பிளாண்டேசனுக்கு உட்பட்ட பட்டாவத்தை தோட்டத்தில் காவல் வேலைக்காக தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒய்வுப் பெற்ற இராணுவத்தினரை அமர்த்த தோட்ட நிர்வாகம் முடிவெடுத்ததை அடுத்து, இப்பிரச்சினை தொடர்பாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கிய காவல் வேலையை தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒய்வு பெற்ற இராணுவத்தினருக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை தோட்ட நிர்வாகம் எடுத்ததை அடுத்து, அத்தோட்ட மக்களால் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டு வரப்பட்டது.
செந்தில் தொண்டமான் அவர்கள் உடனடியாக தோட்ட நிர்வாகத்தை தொடர்புக்கொண்டு இப்பிரச்சினை தொர்பாக கலந்துரையாடியதுடன், தோட்டத்தில் ஒய்வுபெற்ற இராணுவத்தினர் அமர்த்தபடுவார்களானால் தோட்ட நிர்வாகத்தை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேற்ற் வேண்டிய நிலை உருவாகும் என தோட்ட நிர்வாகத்திற்கு செந்தில் தொண்டமான் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
செந்தில் தொண்டமான் அவர்களால் தோட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இப்பிரச்சினைக்கு சுமூகமான தீர்வினை வழங்குவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment