தானிஸ் அலி உள்ளிட்ட 4 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

தானிஸ் அலி உள்ளிட்ட 4 பேருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன் சொத்துகளுக்கு சேதமேற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர்களுக்கு இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மன்னர் அத்துமீறி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி அலுவலகத்திற்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள தானிஸ் அலிக்கு ஓகஸ்ட் 15ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஔிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து குருணாகல், வேபட பிரதேசத்தைச் சேர்ந்த தானிஸ் அலி எனும் நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் செல்ல முற்பட்ட வேளையில் விமானமொன்றில் வைத்து கடந்த ஜூலை 26ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...