முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்து சென்றடைந்தார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் (11) தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

கடந்த ஜூலை 13ஆம் திகதி நாட்டிலிருந்து வெளியேறி மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

இன்று வரை அந்நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அவர் தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.

இது தொடர்பில், தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனீ சங்ரத் (Tanee Sangrat) தனது ட்விட்டர் பதிவில், தற்போதைய இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷச தாய்லாந்துக்கு வர அனுமதி கோரியுள்ளதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

அத்துடன், இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவர் என்ற வகையில், தாய்லாந்து மற்றும் இலங்கை இடையே 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வீசா விலக்கு ஒப்பந்தத்தின்படி, கோட்டாபய  ராஜபக்‌ஷவுக்கு வீசா இன்றி 90 நாட்களுக்கு தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் எனவும், அவரது எதிர்கால பயணத்தை அடிப்படையாகக் கொண்டு இது தற்காலிக தங்குதலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Add new comment

Or log in with...