முன்னாள் நிதியமைச்சர்கள் மீதான பயணத்தடை செப்டெம்பர் 05 வரை நீடிப்பு

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை, எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளாக குறித்த இருவரும் உள்ளடங்குவதால் உயர் நீதிமன்றத்தினால் இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்டோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு இன்று (01) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த மனு எடுத்துக் கொள்ளப்பட்டதிலிருந்து இவ்வாறு அவர்களது பயணத்தடை நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...