கோட்டாபய சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு பயணம்

- ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் எழுந்த போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி அதிகாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு அழைத்துச் செல்ப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 14ஆம் திகதி சிங்கப்பூர் சென்றடைந்த அவர், 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், அக்காலக் கெடு நிறைவடைந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அவகாசம் வழங்கப்பட்டது.

குறித்த காலக் கெடு நாளையுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்படும் நிலையில், நாளை (11) அவர் தாய்லாந்திற்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தாய்லாந்தில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...