நாடளாவிய ரீதியில் Litro கேஸ் சிலிண்டர்களின் விலைகள் வெளியீடு

- கொழும்பு, கம்பஹாவில் குறைந்த விலை
- யாழ்ப்பாணம், அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவில் அதிக விலை

குறைக்கப்பட்ட Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள் நிரப்பலுக்கான புதிய விலைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளை கருத்திற் கொண்டு, நாட்டின் 25 மாவட்டங்களிலும் விற்பனை செய்யக் கூடிய உச்சபட்ச சில்லறை விலைகளை (MRP) லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

நள்ளிரவு (09) முதல் அமுலாகும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு குறைக்கப்பட்டுள்ளன:

  • 12.5kg - ரூ. 246 இனால் குறைப்பு
  • 5kg - ரூ. 99 இனால் குறைப்பு
  • 2.3kg - ரூ. 45 இனால் குறைப்பு

அதற்கமைய, 37.5kg, 12.5kg, 5kg, 2.3kg எரிவாயு சிலிண்டர்களின் மீள்நிரப்பலுக்கான புதிய விலைகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த செலவுகளின் அடிப்படையில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஆகக் குறைவான வகையில்,

  • 37.5kg - ரூ. 18,150
  • 12.5kg - ரூ. 4,664
  • 5kg - ரூ. 1,872
  • 2.3kg - ரூ. 869 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம்,  அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவில் அதிக விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...