மேலும் 50 புதிய LIOC எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க அனுமதி

- LIOC யினால் விரைவில் விண்ணப்பங்கள் கோர நடவடிக்கை

நாடு முழுவதும் மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக LIOC நிறுவனம் அறிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

அத்துடன், விரைவில் இது தொடர்பான விண்ணப்பங்களுக்கான அழைப்பை விளம்பரங்கள் மூலம் வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய காணி, உட்கட்டமைப்புச் செலவுகள் விநியோகஸ்தர்களால் மேற்கொள்ளப்படுமெனவும், எரிபொருள் பவுசர்கள், உபகரணங்கள் தொடர்பான முதலீடுகள் LIC நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான காணியானது, விண்ணப்பதாரருக்கு சொந்தமானதாகவே அல்லது குத்தகைக்கு பெறப்பட்டதாக இருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...