இன்று அகற்றுமாறு தெரிவிக்கப்படட காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சட்ட மாஅதிபர் சலுகை

- உரிய சட்ட விதிகளின்றி ஓகஸ்ட் 10 வரை அகற்றப்படமாட்டாது

உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் காலி முகத்திடல் ´கோட்டா கோ கம' போராட்டப் பகுதியில் உள்ள சட்டவிரோத கூடாரங்களை எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி வரை அகற்றப்படமாட்டாது என, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, பொலிஸ் மா அதிபருக்கு இது தொடர்பான உரிய அறிவுறுத்தல்களை உடனடியாக வழங்கவுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன தெரிவித்தார்.

காலி முகத்திடல் பகுதியில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் பயிர்ச் செய்களை இன்று (05) பிற்பகல் 5.00 மணிக்கு முன்னர் அகற்றுமாறு பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட  மனுக்கள் இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சட்ட மாஅதிபரினால் இவ்வாற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இக்காலப்பகுதிக்குள் மேற்படி அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடாரங்களை அகற்றுவது தொடர்பான அடிப்படை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதிவாதிகளுக்கு எந்த தடையும் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த பிரதேசத்தை விட்டு தாமாக முன்வந்து வெளியேற விரும்புபவர்கள் வெளியேறுவதற்கும், இந்த இணக்கப்பாட்டுக்கும் எவ்வித தடங்கலும் இல்லையெனவும் மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...