தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோரை தாக்கியோரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களை காயப்படுத்தியமை மற்றும் பொலிஸ் வாகனத்தை சேதப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளங் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தேசபந்து தென்னகோன், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மற்றும் மேலும் இரு பொலிஸாரை கடந்த மே 10ஆம் திகதி கொள்ளுபெட்டி பெரஹெர மாவத்தையில் வைத்து தாக்கிக காயப்படுத்திய குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் (CCD) விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய, இது தொடர்பில் பெறப்பட்ட கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் பலர் இனம்காணப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

எனவே, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

071 859 17 35
071 859 27 35
071 859 17 33

றிஸ்வான் சேகு முகைதீன்


Add new comment

Or log in with...