குறுந்திரைப்பட விழாவில் இலங்கைக்கு கௌரவம்

இந்தியாவில் நடாத்தப்பட்ட சர்வதேச ரீதியிலான" INDIE SHORTS FILM 2022குறும்படப் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நுவரெலியாவைச் சேர்ந்த பத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2022ஆம் வருடத்திற்கான சர்வதேச குறும்படப் போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையின் பத்தும் மஹாகம சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். சச்சின் செந்தில்குமாரன் மற்றும் பத்தும் மஹாகம இணைந்து இயக்கிய 'முகம்' என்ற குறும்படத்தில் நடித்ததால் அவர் இவ்விருதை வென்றிருப்பது இலங்கை குறும்படத்துறைக்கும் வளர்ந்து வரும் கலைஞருக்கும் கிடைத்த கெளரவமாகும். பத்தும் மஹாகம எழுதிய 10நிமிட குறும்படத்தில் உரையாடல் இல்லை என்பதும் சிறப்பு அம்சமாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் இறுதி வருட மாணவரான பத்தும், நுவரெலியாவைச் சேர்ந்த வர்த்தகரும் ஊடகவியலாளருமான சந்திரசிறி மஹாகமவின் மகனாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலவாக்கலை குறூப் நிருபர்

 

 


Add new comment

Or log in with...