நேற்றையதினம் (26) விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட முக்கிய போராட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் தானிஸ் அலிக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று (27) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பொலிஸார் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து அதன் ஔிபரப்புக்கு இடைஞ்சல் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தானிஸ் அலி, நேற்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் செல்ல முற்பட்ட வேளையில் விமானமொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
Add new comment