ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்படும் நபர் விமானத்தில் கைது

- கைதின் போது அதிகாரிகளுக்கும் குறித்த நபருக்கும் இடையில் தள்ளுமுள்ளு

ஜூலை 13ஆம் திகதி ரூபவாஹினிக்குள் அத்துமீறி நுழைந்து, ஒளிபரப்பை சீர்குலைக்க முயன்றதாக தெரிவிக்கபபடும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானிஸ் அலி எனும் குறித்த நபர், இன்றையதினம் (26) கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய் செல்ல முயன்ற போது விமானத்தில் வைத்து CID யினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சியொன்று பதிவிடப்பட்டு, அது தற்போது வைரலாக பரவி வருகின்றது.

குறித்த வீடியோவில்..

அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்பட்டு, விமானத்தில் ஏறுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கைது நடவடிக்கை தொடர்பில், குறித்த நபர் ஆட்சேபனை வெளியிடுவதோடு, அவரை கைது செய்ய 3 அதிகாரிகள் முயற்சி செய்வதோடு, அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இந்நிலையில், விமானத்திலிருந்தவர்களால் அவரது கைதுக்கான நீதிமன்ற பிடியாணை மற்றும் பயணத்தடையை காண்பிக்குமாறு தெரிவிப்பதை, குறித்த வீடியோ காட்சியில் காணக்கூடியதாக உள்ளது.


Add new comment

Or log in with...