- அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன
- இணை பேச்சாளர்கள் நியமிக்கப்படமாட்டாது
- அந்தந்த அமைச்சர்கள் மூலம் பதில் வழங்க நடவடிக்கை
அமைச்சரவை பேச்சாளராக, வெகுசன ஊடக அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சரவை பேச்சாளர்கள் எவரும் நியமிக்கப்படவில்லையெனவும் அதற்கு பதிலாக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் மேலதிக விளக்கங்கள வழங்க அதற்கு அடுத்து இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திபில் குறித்த அமைச்சரவை அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக , அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், அரச நிதி முகாமைத்துவத்தை சிறப்பாக செயற்படுத்தும் வகையில் அந்தந்த நிறுவனங்களில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிப்பதற்கு தீர்மானித்ததன் அடிப்படையில், நிதியமைச்சர் எனும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்கான நியமனங்களை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய,
- இறைவரித் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தரான, டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாக, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திலுள்ள, பி.பி.எஸ்.சி. நோனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- திறைசேரி பிரதிச் செயலாளர் பதவிக்கு இலங்கை கணக்காய்வாளர் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரான டபிள்யூ.ஏ. சத்குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
- நிதியமைச்சின் கீழுள்ள தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் நாயகமாக, நிர்வாக சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தரும், சிரேஷ்ட உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ள ஜூட் நிலுக்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டிற்கு வருமானத்தை சேர்ப்பதன் முக்கிய விடயத்தை கருத்தில் கொண்டு, இந்நியமனங்கள் வழங்கப்பட்டதாக, அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
Add new comment