ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள: ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் வழமைபோன்று செயலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அதிகாரிகள் மட்டத்திலுள்ளோர் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்தவகையில் ஜனாதிபதி மிக விரைவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்து தமது கடமைகளை மேற்கொள்வாரென்றும் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகத்தின் திருத்த வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் செயலகத்தின் உத்தியோக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்பதாக பாதுகாப்புச் செயலளார் கமல் குணரட்ன தலைமையிலான குழுவொன்று செயலகத்தில் கண்காணிப்பு நடவடிக்ைகயொன்றை மேற்கொண்டது. அதனையடுத்து நேற்று முதல் வழமைபோன்று செயலகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் 12தினங்களுக்கு முன் ஜனாதிபதி செயலகத்தின் ஒருபகுதி கையகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...