போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான அவமானகரமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ராஜபக்ஷக்களின் மொட்டு அரசாங்கம், வழக்கமான மிலேச்சத்தனமான மற்றும் வன்முறையைப் பயன்படுத்தி, தற்போதைய 'ராஜபக்ஷக்களின் நிழல் அரசாங்கம்' இன்று அதிகாலை காலிமுகத்திடலில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது கோழைத்தனமான வன்முறைத் தாக்குதலைத் மேற்கொண்டுள்ளது. அதனை அறிக்கையிட வந்த வந்த பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் அங்கவீனமான இராணுவ வீரர்களுக்கும் அந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதுடன் அது உண்மையில் கொடூரமான வன்முறையாகும்.

புதிய ஜனாதிபதி இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை ஒரு நாள் கடக்கும் முன்னரே ஆரம்பித்துள்ளார். தனது எதிர்கால ஆட்சியின் தன்மை என்பதை உணர்த்த முற்பட்டுள்ளாராயின், இவ்வாறான கொடுமைகளுக்கு அப்பாற்பட்ட பலம் வாய்ந்த அரசாங்கங்கள் கூட மக்கள் சக்தியால் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை அவருக்கு நினைவுபடுத்த வேண்டும்.

அந்தந்த சிவில் போராட்டத்தின் போராளிகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள் அனைத்தும் மீள வழங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும், பாதுகாப்புப் படையினர் விடியற்காலையில் அத்துமீறி நுழைந்து 'மேலிட உத்தரவுப்படி' இந்த கோழைத்தனமான தாக்குதலை நடத்தினர். ராஜபக்ஷ அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்ட வெறியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது, ஆயினும் அது அவ்வாறு இல்லை என்று நினைக்கவும் எம்மிடம் எந்த காரணமும் இல்லை.

காலி முகத்திடல் உள்ளிட்ட இந்நாட்டு மக்களின் போராட்டத்தின் பலனாகவே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கான வழியை ஏற்படுத்துவதற்காக அல்லாததாக இருந்த போதிலும், அதன் மூலம் அவர் அதிகாரத்தைப் பெற்றுள்ளார். தான் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து 12 மணித்தியாலங்கள் ஆவதற்கு முன்னர் அதனை அவர் மறந்து விட்டார் என்பது வருத்தமளிக்கும் அதேவேளை, மக்கள் போராட்டத்தால் ராஜபக்ஷ ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதனால் அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம்.

நாடு ஒரு நாகரீகமான நாடாக எழுந்து நிற்பதற்கு இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடந்த ராஜபக்ஷ அரசாங்கம் அதனை இல்லாதொழித்தது. அதுவே தற்போதைய 'ராஜபக்ஷ நிழல் அரசாங்கத்தில்' இலும் நடக்க ஆரம்பித்துள்ளது. இது ராஜபக்ஷ வெறியை விடவும் தீவிர வெறியாக மாறியிருப்பதே அதன் வித்தியாசமாகும்.

நாடு எவ்வளவு அதல பாதாள படுகுழியில் வீழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்வதற்குப் பதிலாக, தனது அதிகாரத் திட்டத்திற்காக மட்டுமே செயல்படும் இந்த 'ராஜபக்‌ஷ நிழல் அரசாங்கம்' மக்களின் அடிப்படை உரிமையான எதிர்ப்பை வெளிக்காட்டும் உரிமையையும், சுதந்திரத்தையும் மீறியுள்ளது. ஊடகவியலாளர்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் மீறியுள்ளது. நிராயுதபாணிகள், அங்கவீனமுற்ற படை வீரர்கள், பொதுமக்கள் மீது தமது ஆயுத பலத்தை பயன்படுத்தி தாக்குதல் நடாத்த நடவடிக்கை எடுத்த, உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைவலுக்கும் எதிராக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அனைவருக்கும் எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான தாக்குதலால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், மேலும் தாக்குதலின் உள்ளார்ந்த வெறுப்புடன் அதைக் கண்டிக்கிறோம். நம் நாட்டை கல் யுகத்திற்கு தள்ள முயலும் "ராஜபக்‌ஷ நிழல் அரசுக்கு" எதிராக முழு நாடும் வெகுண்டு எழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இந்த அரசுக்கு வலியுறுத்துகிறோம்!


Add new comment

Or log in with...